Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு  Jan 6, 12
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
நேற்று முன்தினம் இரவு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
திருமாமணி மண்டபத்தில் சவுமியநாராயணப்பெருமாள் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவில் உற்சவ பெருமாளுக்கு சாத்துப்படி நடந்து, தங்ககவசம் சார்த்தி ராஜாங்க சேவை நடந்தது. பின்னர் பரமபதவாசல் முன்பு பெருமாள் எழுந்தருள, சதுர்வேத பாராயணங்கள் ஒலிக்க, ஆழ்வார் மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 11.30 மணிக்குபரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் உபய நாச்சிமார்களுடன் சொர்க்கவாசல் எழுந்தருளினார்.பின்னர் ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. பின்னர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர் ஆஸ்தானம் சென்றார்.

source : Dinamalar