Nagaratharonline.com
 
தாம்பரம் ஈஸ்டர்ன் பை-பாஸ் சாலை திட்டத்திற்கு விடிவு  Jan 10, 12
 
தென்மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைகின்றன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்னைக்குள் நுழையாமல், வேளச்சேரி வழியாக செல்லும் வகையில், தாம்பரம் ஈஸ்டர்ன் பை-பாஸ் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், ஜி.எஸ்.டி., சாலையில் பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷன் அருகே துவங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக வேளச்சேரி சாலையை அடையும் வகையில் உள்ளது. நான்கு வழிப்பாதையாக அமையும் இதன் நீளம், 9 கிலோ மீட்டர். கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.


முதல்கட்டமாக நிலம் கையகப்படுத்தப்பட்ட, 4 கி.மீ., தூரத்திற்கு, 30 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சாலை அமையவுள்ள ஏழு கிராமங்களில் ஐந்து கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. மற்ற பகுதிகளில் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.'' என்றார்.

source : Dinamalar