|
காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம் Jan 10, 12 |
|
காரைக்குடியில் கம்பன் கழகத்தின் புத்தாண்டு 2012-ஆம் ஆண்டின் முதல் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பனின் பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினை வாக நிறுவியுள்ள மீனாட்சி-பழனியப்பா அறக்கட்டளையின் 5-ஆம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. செல்வி எஸ். ஐஸ்வர்யாவின் இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது.
அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் கா. மணிமேகலை தலைமைவகித்துப் பேசினார். கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் பேராசியர் தெ. ஞானசுந்தரம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
முன்னதாக, கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன் வரவேற்றார். கம்பன் அறநிலை அறங்காவலர் நா. மெய்யப்பன் நன்றி கூறினார்.
source : Dinamani |
|
|
|
|
|