Nagaratharonline.com
 
மூடிக்கிடக்கும் பிரசவ கட்டடம் : கல்லல் ஒன்றிய மக்கள் அவதி  Jan 20, 12
 
செம்பனூர் வட்டார மருத்துவமனைக்கு கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லல்,வெற்றியூர், அரண்மனை சிறுவயல்,கூமாச்சிப்பட்டி, நெற்புகப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் மருத்துவ சிகிச்சை,பிரசவத்திற்கு வருகின்றனர். இடநெருக்கடி காரணமாக பிரசவத்திற்கு இரண்டு படுக்கைகள் மட்டும் இருந்ததால் 2010ல் ரூ.7.5 லட்சம் செலவில் புதியதாக பிரசவ கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டுபல மாதங்களாகியும்,இதுவரை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

கட்டடம் திறக்கப்படாததால் சுற்றியுள்ள கிராம மக்கள் பிரசவத்திற்கு காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் செல்ல வேண்டியுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த மருத்துவமனையில் இரவு பணியில் டாக்டர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இரவு பணிக்கு நிரந்தர டாக்டர் நியமித்து,செயல்படாமல் பூட்டி கிடக்கும் பிரசவ கட்டடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar