|
செக் மோசடி வழக்கு: மருந்து நிறுவன அதிபருக்கு வாரன்ட் Jan 20, 12 |
|
சென்னை சின்மயா நகரில், வசந்தா என்டர்பிரைசஸ் எனும் மருந்து விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம். கடந்த ஆட்சியின் போது, காலாவதியான மருந்துகளை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக, சூளையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், "என்னிடம் இருந்து பெறப்பட்ட, 10 லட்ச ரூபாய் கடனுக்கு, இரண்டு காசோலைகளை மீனாட்சி சுந்தரம் வழங்கினார்.
காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அவை திரும்பி வந்தன. சட்டப்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த, சின்மயா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, எழும்பூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|