|
கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்ற விழா Jan 20, 12 |
|
கீழச்சிவல்பட்டியில் பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து, இயற்கை நமக்கு அளித்த பரிசுகள் ஏராளம். அதனை கொண்டாடிப் பேணும் வகையில் நடத்தப்படுவதுதான் தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கலையொட்டிய கலாசார நிகழ்வுகள். முந்தைய தலைமுறைகள் தந்த கலைமுறைகளை நாம் பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, தமிழ் மன்றத் தந்தை சிவராமன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து குறள்சூடி உமையாள் என்ற 3 வயது குழந்தையின் தமிழ் புலமையை எடுத்துக் கூறும் வகையில் வருடங்கள் 60, செல்வங்கள் 16, திருமுறைப் பாராயணம், திருக்குறள் 7, போன்ற இடைவிடாத சொற்பொழிவு நடைபெற்றது. குழந்தையின் திறமையை அடிகளார் பாராட்டினார்.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்குக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம் முன்னிலை வகிக்க, குறள் கொடுக்கும் குரல் என்ற தலைப்பில் மாணவி தவமணியும், உணர்வில் உயர்தமிழ் என்ற தலைப்பில் மாணவன் கார்த்திக்கும் குழந்தை இலக்கியம் பற்றி பால.நடராஜன், ஞானத்தமிழ் குறித்து வெங்கடராம அய்யங்கார், இயற்றிமிழ் குறித்து கவிஞர் அரு.நாகப்பன், நிறைவாக இலக்கியத்தில் நகைச்சுவை குறித்து கமலா ராமநாதன் ஆகியோர் பேசினர்.
source ; Dinamani |
|
|
|
|
|