Nagaratharonline.com
 
ஜன 28 திருப்புத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்  Jan 25, 12
 
ம் திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சனிக்கிழமை (ஜன. 28) வேலைவாய்ப்புத் துறை மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள், செவிலியர் பயிற்சி பெற்றோர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இதில் கலந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்கள் அசல் கல்விச் சான்று, தொழில்நுட்ப கல்விச் சான்று, முன் அனுபவச் சான்று மற்றும் பயோடேட்டா ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

source : Dinamani