Nagaratharonline.com
 
ஜன. 29 இலங்குடி பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா  Jan 25, 12
 
காரைக்குடி அருகே இலங்குடியில் பூரணை புட்கலாம்பா சமேத ஸ்ரீ பகற்சாலமூர்த்தி ஐயனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இலங்குடியில் உள்ள ஐயனார் ஆலயத்தில் ஐயனார் திருமாலுக்கும் சிவனுக்கும் பால மரத்தின் அடியில் அவதரித்தமையால் பகற்சாலமூர்த்தி என இங்கு எழுந்தருளியுள்ள ஐயனார் பெயர் பெற்றார்.
இந்த ஆலயம் தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிதாக மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 26) காலையில் கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜைகள் தொடங்குகின்றன.
அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆறாம் கால யாகபூஜைகள் நிறைவுற்று பகற்சாலமூர்த்தி ஐயனாருக்கும், பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிகள் செய்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், நாலுகரை வேளார், இலங்குடி ஊர் பிரமுகர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

source : Dinamani