Nagaratharonline.com
 
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் பயணம்  Jan 28, 12
 
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலா ற்று சிறப்பு வாய்ந்த தொன்மையான சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா ஆர்வலர்கள் குழுவினர் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.

தில்லி ஐஐடி யின் ஓய்வு பெற்ற போராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான எஸ். சுவாமிநாதன் தலைமையில் சென்னை, தில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 43 பேர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று, புராதனச் சின்னங்கள் உள்ள அமைவிடங்களைப் பார்வையிட 3 நாள்கள் பயணமாக வியாழக்கிழமை புதுக்கோட்டைக்கு வந்தனர்.

மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் சிலையிலிருந்து பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தில் நார்த்தாமலை, மேலமலை, விஜயாலயா சோழீஸ்வரம், சமணர் குகை, பழியிலீஸ்வரம், கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, தாயினிப்பட்ட முதுமக்கள் தாழி, சித்தன்னவாசல், அறிவர் கோயில், ஏழடிப்பட்டம், பனங்குடி, குடுமியான்மலை, கொடும்பாலூர், விராலூர், செம்பாட்டூர், குன்றாண்டார்கோவில், திருமயம் மலையக்கோவில், கண்ணனூர் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

source : Dinamani