|
டிச. 8 காரைக்குடியில் மின் தடை Dec 4, 09 |
|
காரைக்குடி, டிச. 3: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.8) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி 110 உபமின் நிலையத்தில் இம்மாதம் 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
எனவே காரைக்குடி, தேவகோட்டை சாலை, அரியக்குடி, பேயன்பட்டி, ஆறாவயல், செக்காலைக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றுப்புறக் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று சிவகங்கை மின் நிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஆர்வி. யதீந்திரன் தெரிவித்துள்ளார்.
Source:Dinamani - 04 Dec 2009 |
|
|
|
|
|