Nagaratharonline.com
 
தைப்பூச திருவிழா: பழனிக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்  Feb 3, 12
 
பழனி, பிப். 2-


முருகபெருமானின் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 6-ந்தேதி திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, 7-ந்தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.

தைப்பூச விழாவுக்காக வருகிற 4-ந்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தைப்பூசதிருவிழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படும். இவை வருகிற 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை இயக்கப்படும்.

இதன்படி 250 சிறப்பு பஸ்கள் தவிர தேவைக்கு ஏற்பவும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், காரைக்குடி, நத்தம் பஸ் நிலையத்தில் பக்தர்களுக்கு உதவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source:Maalaimalar