Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் ஐம்பெரும் விழா  Feb 13, 12
 
 
 
 
 
திருப்பத்தூர், பிப்.12: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் உலகம் சுற்றிய தமிழர் சோமலெ-வின் 91-வது பிறந்த நாள் விழா ஐம்பெரும் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உலகம் சுற்றிய தமிழர் மறைந்த சோமலெ நினைவாக அவர் பிறந்த நெற்குப்பையில் இயங்கிவரும் சோமலெ நினைவு கிளை நூலகத்தில் இணையதளத் துவக்க விழா, வட அமெரிக்கா நகரத்தார் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம், தமிழ்நாடு அறக்கட்டளையின் சிவகங்கை மாவட்ட கல்வி வளர்ச்சி திட்ட அறிவிப்பு விழா, சோமலெ விருது வழங்கும் விழா, பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியார் நூற்றாண்டு விழா என ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, தமிழ்ச்செம்மல் தமிழண்ணல் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் கா.ஆனந்தன் வரவேற்றார். சோமலெ நூலகத்தின் திட்டங்கள் குறித்து சோமலெ. சோமசுந்தரம் விளக்கினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா, இணையதள வசதியைத் துவக்கிவைத்து, சிவப்பிரசாகத்துக்கு சோமலெ விருது வழங்கினார்.
தமிழ்நாடு அறக்கட்டளை இயக்குனர் மன்மதாதேவி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுடலைமுத்து, பொது நூலகத் துறை இணை இயக்குநர் பிச்சை, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சோமலெ விருது ஏற்புரையாக கொச்சி முத்தமிழ் சங்கத்தின் அ.சொ.சிவப்பிரகாசம் பேசினார். தலைமையுரையாற்றிய தமிழண்ணல் சோமலெயின் தமிழ்ப்பற்று, தமிழை உலகறியச் செய்தது குறித்துப் பேசினார்.
தொடர்ந்து பள்ளிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குமுதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத், மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன், பேரூராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவிராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழா இணைப்புரையை மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.மோகன் தொகுத்து வழங்கினார்.
லெ.ம,லெட்சுமணன் நன்றி தெரிவித்தார்.

Source:Dinamani