Nagaratharonline.com
 
புதிய மின்வெட்டு முறை  Feb 16, 12
 
தமிழகம் முழுவதும் வரும், 20ம் தேதி முதல், புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், தினமும் கண்டிப்பாக, இரண்டு மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும். காலை 8 மணி முதல், மாலை 5 மணிக்குள், சுழற்சி முறையில் தனித்தனியே ஒரு மணி நேரம் என, இரண்டு முறை தடை செய்யப்படும். இரவு நேரத்தில் சென்னைக்கு மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் ஒரு முறை எட்டு மணி நேர மின்வெட்டை அமலாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.