|
மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆண்டு விழா Feb 23, 12 |
|
மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியின் 2-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பள்ளித் தலைவர் எஸ்.பி. குமரேசன் தலைமை வகித்துப் பேசினார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றுப் பேசினார்.
தொழிலதிபர் டாக்டர் ஏ.சி. முத்தையா மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசுகையில், சமுதாயத்தில் ஒரு மனிதன் சிறந்தவராக அனைத்துப் பண்புகளையும் உடையாவராக, நல்ல மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வியேயாகும். அதற்கு சிறந்த கல்வி நிறுவனங்களும் நமக்குத் தேவை. ஆசிரியர்களுக்கும் அத்தகைய பொறுப்புணர்வு உண்டு. இந்தப் பகுதியில், செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறந்ததொரு கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. கல்வியோடு அனைத்துத் திறன்களையும் கற்றுத் தந்து, மாணவர்களை மேலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஏஆர்.எல். சுந்தரேசன், தேவகி முத்தையா , பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், தொழிலதிபர் பழ. படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ. சுப. துரைராஜ், பள்ளியின் நிர்வாகிகள் டாக்டர் சோமசுந்தரம், என்.என்.எல். நாச்சியப்பன், வைரவன் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
source ; Dinamani |
|
|
|
|
|