Nagaratharonline.com
 
How to get PAN CARD  Dec 9, 09
 
ஃபார்ம் 49ஏ

இதுதான் பான் கார்டுக்குரிய விண்ணப் பம். இதில் உங்களு டைய இனிஷியலுக் கான விரிவாக்கத்துடன், உங்களது பெயரைக் குறிப்பிட வேண்டியது மிக அவசியம். இதில் ஏதாவது குளறுபடி என் றால் உங்கள் பான் கார்டு வழங்குவதில் தாமதமாக லாம்; உங்களுக்கு வேறு ஏதாவது பெயர் இருந் தால், அதையும் விண் ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

தந்தையின் பெயர் என்ற இடத்தில் திருமண மான பெண்களும், தங் களது தந்தையின் பெய ரையே குறிப்பிட வேண் டும்; வீடு மற்றும் அலு வலக முகவரி, எஸ்.டி.டி., குறியீட்டு டன் டெலிஃபோன் நம்பர், மொபைல் எண், பிறந்த தேதி, அரசு ஊழி யரா, தனியார் துறையா போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

பாஸ்போர்ட் விண் ணப்பிக்கத் தேவைப்படும் 3.5 செ.மீ., து 2.5 செ.மீ அளவுள்ள, தெளிவான புகைப்படத்தை விண்ணப் பத்தில் அதற்குரிய இடத் தில் ஒட்ட வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய மிக முக்கியமான டாக்கு மென்ட்கள் இரண்டு. அடையாள அத்தாட்சி. மற்றும் வசிப்பிட முகவரி.

ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக் காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், அல்லது உங்கள் தொகுதிக்கான எம்.பி., எம்.எல்.ஏ., வார்டு கவுன்சிலர், கெசடட் அரசு அதிகாரி இவர்களில் யாராவது ஒருவர் வழங்கிய அடையாளச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரு பிரதியை இணைத்தால் அதுவே ஆள் அடையாளம், மற்றும் வசிப்பிட அத்தாட்சி இரண்டுக்கும் உரியதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

உங்களுடைய பிறந்த குழந்தைக்குக் கூட நீங்கள், பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்க முடியும். பிறந்த குழந்தைக்கு எதற்கு பான் கார்டு என்று நீங்கள் கேட்கலாம். சிலர், மைனர் குழந்தைகளின் பேரில் வங்கியில் டெபாசிட் போட லாம்; சொத்து வாங்கலாம்; ஷேர் களிலோ இதர வகை களிலோ முதலீடு செய்யலாம். அப்போது பான் நம்பர் கேட் பார்கள். எனவே, தேவைப்பட்டால் குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

source : Mangayarmalar dec2009