|
சிறுநீரகக் கல்லை தடுக்கும் எலுமிச்சை பழச்சாறு Mar 10, 12 |
|
"கோடையில் எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடிப்பதால் சிறுநீரக கல்லை தடுக்கலாம்,' என, உலக சிறுநீரக தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி
விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இதில் தலைமை சிறுநீரகவியல் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது: சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு சிறுநீரக வியாதிகளுக்கு வாய்ப்பு அதிகம். மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் சிறுநீரகத்தை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு வைக்கும், "கடாவர் டிரான்ஸ்பிளான்டேஷன்' சிகிச்சைக்கு மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல், நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி. கோடையாக இருப்பதால் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கலாம். சமீபகாலமாக மருந்துகளின் மூலம் சிறுநீரக நோயை தள்ளிப்போட முடியும். டாயலிசிஸ், அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கலாம். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியம், என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|