|
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியக் கழகத் தொடக்க விழா Mar 12, 12 |
|
மக்களின் பண்பாடுகளைப் பறைசாற்றுபவை இலக்கியங்கள்தான் என்றார் அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கலைதாசன்.
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி முதல்வர் தா. மணி தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆங்கில இலக்கியக் கழகத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
உலக இலக்கியங்கள் எந்த மொழியில் படைக்கப்பட்டிருந்தாலும் அவை மக்களின் பண்பாடுகளையே பறைசாற்றுகின்றன. இன்பியல் இலக்கியங்களைவிட, துன்பியல் இலக்கியங்களே மக்களின் மனதில் விழுமிய உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இன வேறுபாடு, நிற வேறுபாடு, பகை உணர்வு காரணமாக வரும் தடைகள் உடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களது வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து வாழ வேண்டும் என்பதே உலக இலக்கியங்களின் பொதுமைக் கருத்தாகும். செல்லியின் உணர்வுகளை பாரதியின் படைப்புகளில் காணலாம். மாணிக்கவாசகரின் திருவாசகச் சிந்தனைகளை வோர்ட்ஸ் வொர்த் கவிதைகளில் காணமுடிகிறது. தாகூரின் சமூகச் சிந்தனைகளை தமிழ் இலக்கியங்கள் பிரதிபளிக்கின்றன என்றார் அவர். |
|
|
|
|
|