Nagaratharonline.com
 
இலங்குடி பகற்சாலமூர்த்தி ஐயனார் கோவிலில் கும்பாபிஷேக மலர் வெளியீட்டு விழா  Mar 17, 12
 
இலங்குடி பகற்சாலமூர்த்தி ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேக மலர் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன் தொகுத்த கும்பாபிஷேக விழா மலரை கோவிலூர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெளியிட அதனை கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் தொழிலதிபர் லெ.சபாரெத்தினம்செட்டியார் பெற்றுக் கொண்டார்.

திருப்பணிக் குழுத் தலைவர் லெ. சபாரெத்தினம் செட்டியார் தலைமை வகித்துப் பேசினார். திருப்பணிக் குழு துணைத் தலைவர் ஓஷியானிக் எம்.எஸ். மெய்யப்பன் வாழ்த்திப் பேசினார்.
மலர் தொகுப்பாசிரியர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் நன்றி கூறினார். திருப்பணிக் குழு செயலாளர் முரு.பழ. சிதம்பரம், சா.லெ.நா.சா. பெரியணன், கம்பன் கழக நிர்வாகி மெய்யப்பன் மற்றும் நகரத்தார் பிரமுகர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலையில் கணபதி ஹோமமும், முற்பகலில் ஸ்ரீபூரணை புட்கலாம்பா சமேத பகற்சாலமூர்த்தி ஐயனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெற்றன.

source : Dinamani