Nagaratharonline.com
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி காவடி விழா  Mar 20, 12
 
பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கோயில் முன் வளர்க்கப்பட்ட பதிமூன்று அக்னி குண்டங்களில் பத்தர்கள் காவடி மற்றும் பால்குடங்களுடன் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

நெற்குப்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், காவடி மற்றும் பால்குடங்களை எடுத்து வந்தனர்.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 25-ம் தேதி காப்புக் கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து, 15 நாள்களுக்கு தினமும் ஒவ்வொரு ஊரார்களின் மண்டகப்படி நடைபெறும்.

source : Dinamani