|
பஸ் ஸ்டாண்டிற்குள் லாரிகள் ஆக்கிரமிப்பு : புதுவயலில் தடம் மாறும் பஸ்கள் Mar 27, 12 |
|
பயணிகள் பஸ் போக்குவரத்து வசதிக்காக குண்டும் குழியுமாக இருந்த பஸ் ஸ்டாண்ட் பல லட்ச ரூபாய் செலவில் புதுவயல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்கப்பட்டது.
பஸ் போக்குவரத்து அதிகரிப்பால் மக்கள் நடமாட்டம் இந்த பஸ் ஸ்டாண்டில் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக பஸ் ஸ்டாண்டிற்குள் லாரி, வேன், ஆட்டோ, டாக்ஸி, அரிசி ஆலை லாரிகள் என பலதரப்பட்ட வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பயணிகள் நாளுக்கு நாள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக புதுவயல் பகுதிகளிலுள்ள அரிசி ஆலைகளுக்கு வரும் வெளியூர் லாரிகள் அரிசி மூடைகளை இறக்கி விட்டு, பஸ் ஸ்டாண்டிற்குள் "ஹாயாக' ஓய்வு எடுப்பது அதிகரித்துள்ளது.
லாரிகளின் ஆக்கிரமிப்பால் டவுன் பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முடியாமல் வெளியே பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
source : Dinamalar |
|
|
|
|
|