|
ஏப். 16 முதல் காரைக்குடியில் கட்டாய ஹெல்மெட் அமல்: போலீஸôர் அறிவிப்பு Apr 3, 12 |
|
காரைக்குடி, ஏப். 2: காரைக்குடியில் 2 சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது ஏப். 16-ந் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாக போக்குவரத்துப் பிரிவு போலீஸôர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து காரைக்குடி போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் ஆர். மலைச்சாமி திங்கள்கிழமை கூறியது: நாளுக்குநாள் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், விபத்துகள் நடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 808 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் 1,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் நடந்த விபத்தாலும், கோர விபத்தாலும் 274 பேர் உயிரைப் பறி கொடுத்திருக்கிறார்கள். 27 பேர் படுகாயமடைந்து கை, கால் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 970 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.
எனவே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனையின்பேரில், காரைக்குடி டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் 2 சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏப். 16-ந் தேதி முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது செயல்படுத்தப்படவுள்ளது என்றார்
Source:Dinamani |
|
|
|
|
|