|
ஊராட்சிகளில் அங்கீகாரம் இல்லாமல் தொடர்கிறது வீடுகள் கட்ட அனுமதிப்பதால் இழப்பு Apr 18, 12 |
|
பிளான் அப்ரூவல்' மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித்தராமல்,முறைகேடாக வீடுகள் கட்ட அனுமதித்து,சிவகங்கை கிராம ஊராட்சிகளில் நூதன மோசடி நடந்து வருகிறது.
ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும்,வீடுகள் கட்டுவோர் கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் "பிளான் அப்ரூவல்' பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் அதற்கான வரியை செலுத்தி, அப்ரூவல் பெறவேண்டும். அப்ரூவல், வீட்டு வரி ரசீதுடன் விண்ணப்பித்தால் மட்டுமே, வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும்.
ஆனால், இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் தலைவர் மற்றும் கிளார்க்குகள், "பிளான் அப்ரூவல்' இன்றி வீடுகளை கட்ட அனுமதிக்கின்றனர். இதற்காக, உரிய கவனிப்புகளை பெற்று விடுகின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|