|
இன்று முதல் பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் Apr 22, 12 |
|
மாவட்டத்தில்,சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் துவங்கும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
அரசின் திட்டமிடுதல் பணிக்காக, மாநில அளவில் சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், ஏப்.,23 முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு இக்கணக்கெடுப்பு பணி நடக்கும். இதில், வீடுகளில் உள்ளோரிடம் தொழில், ஜாதி, மதம், செய்யும் பணி, ஆண்டு வருவாய், பிற ஆதாய வருமானம், வீட்டில் உள்ள பொருட்கள் குறித்து கணக்கெடுக்கப்படும்.
இவை, உடனுக்குடன் "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள்' மூலம் "டேப்லெட்' கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். மூன்று நகராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சி பகுதிகளை 2,564 வட்டாரங்களாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இப்பணியில் கணக்கெடுப்பாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உட்பட 1,500 பேர் வரை ஈடுபடுத்தப்படுவர். கணக்கெடுப்பு பணிக்காக 800 "டேப்லெட்' கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படும்.
source : Dinamalar |
|
|
|
|
|