Nagaratharonline.com
 
இருளில் மூழ்கிய கல்லல், தேவகோட்டை ரஸ்தா, கண்டனூர், கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷன்கள்  Apr 25, 12
 
தென் மாவட்டங்களோடு வட மாநிலங்களை இணைக்கும் வகையில், காசி, வாரணாசி - ராமேஸ்வரம், சென்னை - ராமேஸ்வரம், மானாமதுரை - மன்னார்குடிக்கு தினமும் ரயில்கள் சிவகங்கை மாவட்டம் வழியாக இயங்குகின்றன.

இந்த ரயில்கள் சிவகங்கை, பனங்குடி, கல்லல், தேவகோட்டை ரஸ்தா, கண்டனூர், கோட்டையூர் போன்ற முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்கின்றன. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை செல்கின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் இரவில் பயணிகளின் வசதிக்கென போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை.
இதனால், பயணிகள் வழிப்பறி திருடர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டிகளை குறிக்கும் வகையில் பொருத்தப்படவேண்டிய சிக்னல் விளக்குகள் இல்லாததால், ரிசர்வேஷன் பெட்டியை பார்ப்பதற்குள் பயணிகள் ரயிலை விட்டுவிடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.


ரயில்வே நிர்வாகம், பயணிகள் வசதிக்கென தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

source : Dinamalar