Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் : Details  Apr 26, 12
 
மெட்ரோ ரயிலுக்கான முதல் வழித்தடம் : சென்னை சென்ட்ரலில் இருந்து பெரியார் சாலை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, அமைந்தகரை, ஷெனாய்நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் 2-வது அவென்யூ, திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை 22 கிலோ மீட்டர் தொலைவு.

2-வது வழித்தடம்: வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, (பிரகாசம் சாலை), சென்û ன சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, அரசினர் தோட்டம், ஜெமினி, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தொலைவு.

3-வது வழித்தடம்: அம்பத்தூர்- திருவான்மியூர் இடையே 3-வது கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதை இன்னர் ரிங்ரோடு, ஆற்காடு சாலை, பனகல்பார்க், எல்டாம்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலை, ராமகிருஷ்ண மடம் சாலை, அடையாறு பாலம், லாட்டீஸ் பிரிட்ஜ் சாலை வழியாக அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் கூறப்படுகிறது.