Nagaratharonline.com
 
ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு ISKCON  Apr 28, 12
 
 
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு மற்றும் சம்ப்ராக்ஷணம் வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடந்தது.

கோயிலில் நிறுவப்பட்டுள்ள கடவுளர் சிலைகளுக்கு காலை 9 மணி முதல் பால், தேன், கங்கை, யமுனை, கோதாவரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்த கொண்டுவரப்பட்ட தண்ணீர், நெய், பழரசங்கள், கரும்புச்சாறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் கருவறையின் நடுவில் ராதை, கிருஷ்ணர், லலிதா, விசாகர் சிலைகளும், இரு பக்கங்களிலும் ஜகன்நாதர், பலராமர், சுபத்திரை, கெüரா, நிடாய் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.