|
சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி : கட்டாய செட்- டாப் பாக்ஸ் Apr 28, 12 |
|
சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி ஆகிய பெரு நகரங்களில் செட்-டாப் பாக்ஸ் கட்டாயம் என்ற தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) அறிவிப்பு, கேபிள் ஆபரேட்டர்களை குழப்பமடைய செய்துள்ளது.
தொலைக்காட்சி சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அறிவிப்பு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூன் 30-ம் தேதிக்குள் சென்னை உள்ளிட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் செட்-டாப் பாக்ஸ் மூலம்தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்று டிராய் அறிவித்துள்ளது.
ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு சாதாரண (அனலாக்) ஒளிபரப்பு தடைசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், பயனாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில், கட்டணச் சேனல்களுக்கு எவ்வளவு, மல்டி சர்வீஸ் ஆபரேட்டர்களுக்கு (எம்.எஸ்.ஓ.) எவ்வளவு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு எவ்வளவு என்று தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் கேபிள் ஆபரேட்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
source : Dinamani |
|
|
|
|
|