|
பட்டமரத்தான் கோவில் பூத் திருவிழா: கே. பாக்யராஜ் பேச்சு May 1, 12 |
|
பொன்னமராவதி, ஏப். 30: நமது கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ்.
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூத் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகப் பங்கேற்ற அவர் பேசியது:
இளம் சமுதாயத்தினர் முடிந்தவரை காதலைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாமல் காதல் வயப்பட்டோர், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, காதலில் வெற்றி பெற வேண்டும். மேலைநாட்டினரும் போற்றும் நமது கலாசாரம் என்றும் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாஸ்கர், சுந்தரவள்ளி, பிரகதீசுவரன், பாரதி பாபு மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் பேசினர். புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார் தொடக்க உரையாற்றினார். ஏற்பாடுகளை, பட்டமரத்தான் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Source:Dinamani |
|
|
|
|
|