|
காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதியின்றி அவதி : இருளில் இரவு நேர பாராக மாறி வரும் அவலம் May 9, 12 |
|
:காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டுக்கு நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நகராட்சி சார்பில் உள்ளே வரும் பஸ்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் அடிப்படை வசதிகள்"ஜீரோ' என்ற அளவில் தான் உள்ளது. ராமேஸ்வரம் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தின் தரை தளம் உடைந்து, படு குழியாக மாறி, நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்த்து வருகிறது.
அரசு போக்குவரத்து கழக தகவல் மையம் அருகே செப்டிங் டேங்க் கழிவுகள் வெளியேறுவதால்,அதன் அருகிலேயே செல்ல முடிவதில்லை.பிளக்ஸ் போர்டுகளின் ஆக்கிரமிப்பால், பஸ் நிற்கும் பகுதியை குறிக்கும் பெயர் பலகையை பயணிகள் பார்க்க முடிவதில்லை.நகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர், ஓட்டல்களுக்கு மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் பைப் இல்லை.
இரண்டு பிளாட்பாரத்திலும் உள்ள 60 மின் விளக்குகளில் மூன்றில் ஒரு பங்கு லைட்கள் மட்டுமே எரிகின்றன. இரவு நேரங்களில், பிச்சைக்காரர்கள் தங்கும் இடமாகவும், மது அருந்தும் பாராகவும் மாறி வருகிறது.பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் உள்ள "இன்' "அவுட்' போர்டு கழற்றி, பஸ் ஸ்டாண்டின் வெளியே போடப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் இஷ்டத்துக்கு வந்து செல்கின்றன.பிளாட்பாரங்களில் இரு சக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பு, நடைபாதை கடை ஆக்கிரமிப்பு தொடர்கிறது. வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் நகராட்சி, அடிப்படை வசதிகளை செய்து தருமா? ஆக்கிரமிப்புகளை அகற்ற யார் முன்வருவர் என்ற ஏக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|