Nagaratharonline.com
 
தேவகோட்டை நால்வர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை  Jun 9, 12
 
தேவகோட்டை நால்வர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை நடைபெற்றது.

அரு.சோமசுந்தரன் தலைமை உரையில் மனிதர்கள் வாழ்வியல் ஞானம் எய்தவேண்டும். சிலருக்கு பிறக்கும்போதே ஞானம் ஏற்படுகிறது. பலருக்கு படிக்கும் காலத்தில் வருகிறது. சிலருக்கு வாழும் காலத்தில் எப்போதாவது ஞானம் ஏற்படுகிறது. மிகச்சிலருக்கு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஏற்படுகிறது. வாலிக்கு உயிர்போகும்போது ஞானம் ஏற்பட்டது. சிலருக்கு ஞானமே ஏற்படுவதில்லை.
ஆனால் திருஞானசம்பந்தருக்கு பிறக்கும்போதே ஞானம் வந்துவிட்டது. மூன்று வயதில் உமையம்மையின் ஞானப்பால் அருந்தி பல்லாயிரம் பாடல்களை பாடினார். அவை முதல் மூன்று திருமுறைகள். அவர் 16 வயதில் முக்தி பெற்றார். தமிழுக்கு அவர் செய்துள்ள தொண்டுக்கு ஈடு இணை இல்லை. இவ்வாறு அரு.சோமசுந்தரன் பேசினார். செந்தில்நாதன் நன்றி கூறினார். முன்னதாக நால்வர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



source : dinamani