Nagaratharonline.com
 
திருப்புத்தூர்: ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி  Jun 18, 12
 
திருப்புத்தூரில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி கிடப்பில் உள்ளதால், ஊழியர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தாலுகா அலுவலக பழைய கட்டடம் அலுவலக பயன்பாட்டிற்கு பற்றாக்குறையாக உள்ளன. இந்த இட நெரிசலை தவிர்க்க, வளாகத்திலேயே மூன்று தளம் கொண்ட புதிய அலுவலக கட்டும் பணி கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே துவங்கியது. இங்கு, ஒரு சில பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. பெரும்பாலான பணிகள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளன.

இதனால், பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் புதிய தாலுகா அலுவலக பணி கிடப்பில் உள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் காண்ட்ராக்டர் பணியை தாமதம் செய்கிறார். விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.