|
தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை Jun 28, 12 |
|
தேவகோட்டை, ஜூன் 25: தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு திருவாசக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொறிகிழி கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமை வகித்து பேசுகையில், தில்லை, திருப்பெருந்துறை, திருஉத்தரகோசமங்கை, திருவண்ணாமலை குறித்து தனிப்பதிகங்கள் பாடிய மாணிக்கவாசகர் தான் பணியாற்றிய மதுரை குறித்து தனிப்பதிப்பகம் பாடாதது ஏன் என்று சிந்திக்கவேண்டும். திருவாசகம் என்பது மனித வாழ்க்கையின் முற்ற முடிந்த அனுபவம் ஆகும் என்று பேசினார். முன்னதாக கயிலைமணிநீலா, சிறுமிகள் லெட்சுமிபிரியா, ஹேமபிரியதர்சினி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். செந்திலநாதன் வரவேற்றார். சிங்கப்பூர் சைவசிந்தாந்த சபைத் தலைவர் முனைவர் கருணாநிதி, ஞானதானசபை நிறுவனர் செட்டியப்பன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சொக்கலிங்கம், பேராசிரியர் சுப்பையா, அகஸ்தீஸ்உடையப்பன், காசிநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் திகுவாசகம் குறித்து உரையாற்றினர்.
ஒவியர் செல்லப்பன் நன்றி கூறினார். ஞானதானசபை சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. நால்வர் மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம் நடைபெற்றது.
Source:Dinamani |
|
|
|
|
|