|
காரைக்குடி குடிநீரில் சாக்கடைகலப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி Jun 28, 12 |
|
காரைக்குடி அண்ணாநகர் பகுதியில், நேற்று காலை குடிநீரில் சாக்கடை கலந்து வந்ததால்,பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
காரைக்குடி நகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மாதவன்தெரு, தென்னரசு தெரு, என்.எஸ்.கே., தெரு, வள்ளுவர் தெரு, இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சம்பை ஊற்று தண்ணீரையே பெரிதும் நம்பியுள்ளனர். நேற்று காலை 5.30 மணிக்கு வந்த தண்ணீரானது கருப்பு கலரில் சாக்கடை கலந்து வந்துள்ளது. அரை மணி நேரத்துக்கும் மேல் இதே போன்று கருப்பு கலரில் வந்துள்ளது.பெண்கள் தண்ணீரை பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கவுன்சிலர் லெட்சுமணன் கூறியதாவது: தண்ணீரை பிடிப்பவர்கள் நல்லியை அடைப்பதில்லை. இதனால் தொட்டியில் விழும் தண்ணீர் திரும்பவும், குழாய்க்கே செல்கிறது.முதலில் வரும் தண்ணீர் கருப்பு கலரில் வந்திருக்கலாம். எனக்கு தகவல் கிடைத்தவுடன் காலை 7 மணிக்கு சென்று பார்த்தேன், அப்பொழுது தண்ணீர் நன்றாக வந்தது. இருந்தாலும் நாளை காலை ஐந்து மணிக்கு சென்று தண்ணீர் எவ்வாறு வருகிறது, என பார்த்து நகராட்சியில் புகார் செய்யப்படும |
|
|
|
|
|