Nagaratharonline.com
 
புதுக்கோட்டை : கார்களில் கறுப்பு ஸ்டிக்கர் அகற்றம்  Jun 28, 12
 
புதுக்கோட்டை, ஜூன் 27: புதுக்கோட்டையில் கார்களின் கண்ணாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு ஸ்டிக்கர்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

கார்களின் முன் மற்றும் பின் கண்ணாடிகளில் 70, பக்கவாட்டு கண்ணாடியில் 50 சதவீத ஒளி ஊடுருவும் திறன் உள்ள ஸ்டிக்கர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாறாக புதுக்கோட்டையில் கார்களில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், உள்ளிட்டோர் புதன்கிழமை ஈடுபட்டனர்.