|
மின் கணக்கீடு அட்டையில் யூனிட் குறிப்பது அவசியம் Jul 2, 12 |
|
""மின்கணக்கீடு செய்த விபரத்தை அட்டையில் குறிக்காதவர்கள் குறித்து,பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்கலாம்,'' காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணி கூறினார்.
பொதுமக்கள் மின் கணக்கீட்டை குறிக்கும் வெள்ளை அட்டையை, மீட்டர் அருகிலேயே வைக்க வேண்டும்.
மின் பயனீட்டளவு, தொகை மற்றும் பணம் செலுத்த வேண்டிய கடைசி நாட்களை அட்டையில் குறித்து தருமாறு, மின் கணக்கீட்டாளர்களை வலியுறுத்த வேண்டும். மறுக்கும் பட்சத்தில் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.
மின்கட்டணத்தை முன்பணமாகவும் செலுத்தவும் வசதி உள்ளது. மீட்டர்கள் தட்டுப்பாடு உள்ளதால், வெளிச்சந்தையில் வாங்கி, மின் இணைப்பு பெற்று கொள்ளலாம்.
வெளி சந்தையில் எங்கு வாங்கலாம், என்ற விபரம் மின்வாரிய அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம், என்றார். |
|
|
|
|
|