|
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பை முழுவதும் அகற்றாத நகராட்சி Jul 3, 12 |
|
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.முக்கியமாக திருப்பத்தூர் ரோடு, தியாகிகள் ரோட்டில் ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனங்கள் நின்று செல்லும் நிலை உள்ளது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தினசரி மார்க்கெட் பகுதியில் நடக்கவே முடியாது.பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பும் அதே நிலைமை தான். தேசிய நெடுஞ்சாலையாக இருந்தும் நகராட்சி,போலீஸ் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 20 நாட்களுக்கு முன் நகராட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை பாதி மட்டுமே அகற்றினர். பல இடங்களில் அகற்றாமல் அப்படியே விடப்பட்டதால் பாரபட்சம் காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் ராம்நகர், தூயமரியன்னை பள்ளி, நகரத்தார் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தும் அதிகாரிகள் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் நீடிக்கிறது. 50க்கும் மேற்பட்ட போலீசார் , நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பல ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு மீண்டும் முளைத்துள்ளது. |
|
|
|
|
|