Nagaratharonline.com
 
களை கட்டிய குற்றால சீசன் - அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு  Jul 9, 12
 
. "ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் நேற்று மாலையில் பொதிகை மலையை மழை மேக கூட்டங்கள் சூழ்ந்தது. ஜில் என தென்றல் காற்று வீசவே சாரல் மழை பொழிந்தது. மலைப்பகுதியில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் இரவு மெயின் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவியிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது

அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும், குளு குளு நிலைமை ஏற்பட்டு சீசன் மீண்டும் களை கட்டியதாலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். இரவு சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.