|
அமர்நாத் யாத்திரை: 2 வாரத்தில் 67 பேர் பலி Jul 12, 12 |
|
அமர்நாத் யாத்திரை தொடங்கி 17 நாட்களில் 67 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளது நிர்வாகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது. .
கடந்த ஆண்டு 45 நாட்கள் நடைபெற்ற யாத்திரை காலத்தில் 105 பேர் உயிரிழந்தனர். இதுதான் அதிக எண்ணிக்கை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் தற்போது 17 நாட்களிலேயே 67 பேர் உயிரிழந்துள்ளதால் அமர்நாத் கோவில் வாரியம் கவலை அடைந்துள்ளது.
மலைப்பகுதியில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் மாரடைப்பு ஏற்பட்டு இந்த உயிரிழப்புகள் நிகழ்வதாக கூறப்படுகிறது.
2 யாத்திரை வழித்தடங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்திவரும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், யாத்திரை செல்பவர்களில் பலர் போலியான மருத்துவ சான்றிதழ்களை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சிலர் நீரிழிவு மற்றும் மூச்சுக் கோளாறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. |
|
|
|
|
|