Nagaratharonline.com
 
அடிக்கடி கட் அடிக்கும் சிவகங்கை-பாகனேரி பஸ் மக்கள் அவதி  Jul 18, 12
 
சிவகங்கையிலிருந்து பாகனேரிக்கு காலை 5 மணிக்கு செல்லும் அரசு பஸ் நாட்டரசன்கோட்டை,கண்டுப்பட்டி, பனங்குடி வழியாக 5.45 மணிக்கு பாகனேரி சேரும்.சென்னை,திருப்பூர்,கோவை போன்ற ஊர்களில் வேலை செய்பவர்கள் ரயில்,பஸ்களில் வந்து காலை நேரங்களில் இந்த பஸ்சில் வருவர்.
பாகனேரியிலிருந்து சிவகங்கைக்கு செல்லும் இந்த முதல் பஸ்சை மக்கள் அதிகம் பயன்படுத்துவர்.இந்த பஸ் திடீர்,திடீர் என நிறுத்தப்படுவதால் இப்பகுதி மக்கள் நீண்டநேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.

பாகனேரியிலிருந்து காலை5.45 பஸ் வராவிட்டால் பனங்குடி, நடராஜபுரம், கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டைக்கு செல்வதற்கு காலை 8.30 மணிக்கு தான் பஸ் வசதி உள்ளது.இதனால் மக்கள் சிவகங்கையை சுற்றி நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இந்த ஒரு பஸ்சும்முறையாக இயக்கப்படாததால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காலை நேரத்தில் தொடர்ந்து பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.