Nagaratharonline.com
 
NEWS REPORT: ராங்கியம் கருப்பர் கோவிலில் பூசை  Jul 26, 12
 
 
 
 
 
நெற்குப்பை, இரணிக்கோவில் பிரிவை சார்ந்த முரு.பழ மற்றும் முத்து. கு. மு. வகையறா பங்காளிகள் அனைவரும் ஒன்று கூடி, ஆடிப்பூரம் அன்று ராங்கியம் கருப்பர் கோவிலில் வருடம் தோறும் நடத்திவரும் "கருப்பர் பூசையை" சிறப்பாக நடத்தினார்கள்.

கிடாய்கள் வெட்டியும் பொங்கலிட்டும் கருப்பருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்தும் தேர் இழுத்தும் வழிபட்டனர். மங்கலப் பொருட்கள் ஏலமும் நடைபெற்றது. பிறந்த வீட்டுப் பெண்மக்களும் கலந்து கொண்டனர்.