Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம்  Aug 1, 12
 
பொன்னமராவதி, ஜூலை 31: பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுற்றுப்பகுதிகளில் புகழ்பெற்ற இந்தக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வடம்பிடித்தனர். தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.எம். ராஜா மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Source:Dinamani