Nagaratharonline.com
 
பிரான்மலை சுற்றுலா திட்டம் பணிகள் தேர்வுக்கு ஆய்வு  Aug 5, 12
 
பிரான்மலையில் சுற்றுலா மைய வளர்ச்சி பணிகளை தேர்வு செய்வதற்காக சுற்றுலா வளர்ச்சி துறை மாநில ஆலோசகர் வசிகரன் ஆய்வுசெய்தார்.

பஸ் ஸ்டாண்ட்,பயணிகள் தங்கும் விடுதி, கழிவு நீர் வாய்க்கால் இணைந்த சிமென்ட் ரோடுகள், வணிகவளாகம், கழிப்பிடம் உட்பட அடிப்படை வசதிகள் பற்றிய திட்டம் ஊராட்சி ஒன்றியம் மூலம் அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டது.ரூ 62 லட்சத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யஅனுமதிக்கப்பட்டுள்ளது. ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயில் கிரிவலப்பாதை, பயணிகள் ஓய்வு இல்லம்,தேரோடும் வீதி ரோடுகளில் பணி செய்ய பரிந்துரைக்கப்பட்டது