Nagaratharonline.com
 
புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பிற சேவைக் கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு?  Aug 5, 12
 
புதிய மின் இணைப்புக்கான கட்டணம், பழுதடைந்த மீட்டர் பெட்டியை மாற்றுவதற்கான கட்டணம், மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் என மின் பயன்பாட்டுக் கட்டணம் அல்லாத பிற கட்டணங்கள் அனைத்தையும் பன்மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

குடியிருப்புக்கான புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை ஒருமுனை இணைப்புக்கு ரூ. 250-லிருந்து ரூ. 900-ஆக உயர்த்த மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.
மும்முனை இணைப்புக்கு (18.6 கிலோ வாட்டுக்கு குறைவான) ரூ. 500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. மும்முனை இணைப்பு (18.6 கிலோ வாட்டிலிருந்து 50 கிலோ வாட் வரை) ரூ. 3000-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்முனை இணைப்பு (50 கிலோ வாட்டிலிருந்து 112 கிலோ வாட் வரை) ரூ. 10,000 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

பழுதடைந்த மீட்டர் பெட்டிகள் மற்றும் மீட்டரை மாற்ற...பழுதடைந்த மீட்டர் போர்டு அல்லது பெட்டிகளை மாற்ற வீடுகளுக்கான ஒரு முனை இணைப்புக்கு இப்போது வசூலிக்கப்படும் ரூ. 150 கட்டணத்தை ரூ. 500-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோல், மும்முனை மீட்டர் இணைப்புக்கு இப்போதுள்ள ரூ. 150 கட்டணத்தை ரூ. 750 ஆகவும், மும்முனை (18.6 கிலோ வாட் முதல் 50 கிலோ வாட் வரையுள்ள) இணைப்புக்கு ரூ. 150-லிருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்த பரிந்துரைத்துள்ளது.