Nagaratharonline.com
 
கல்லலில் போலீஸ் இல்லாததால் விசாரணை பணியில் தொய்வு  Aug 5, 12
 
கல்லல் போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால் வரும் புகாரை முழுமையாக விசாரணை செய்ய முடியாத நிலை உள்ளது.கல்லல் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்குள்ள 30 போலீஸ் பணியிடங்களுக்கு,13 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் அதிகாரிகள் நிலையில் 6 பேரும், மீதி 7 பேரில் எழுத்தர்,பாரா,கோர்ட் நடவடிக்கைகளுக்கு 3 பேர் போக இரண்டு போலீசார் மட்டுமே ரெகுலர் பணி செய்ய வேண்டியுள்ளது. இவர்களே இரவு பணி,பகல் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

2009 செப்டம்பர் 1 தேதி நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்களை இது வரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை.இப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடப்பதுண்டு, இங்கு போலீசார் செல்வதற்கு வழியில்லை.இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது.கல்லல் காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்களை நியமித்து,நிரந்தரமாக இன்ஸ்பெக்டர் நியமிக்க எஸ்.பி.நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar