Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்  Aug 7, 12
 
திருமலை திருப்பதி தேவஸ்தானம்,தேவகோட்டை சின்னமைனர் பாலன் அறக்கட்டளை இணைந்து தேவகோட்டையில் வரும் 29ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துகின்றனர்.

டிரஸ்ட் தலைவர் ராமநாதன் கூறியதாவது: திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவ குழு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டையில் முதன் முறையாக திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 29ல் நடைபெறவுள்ளது.
முதல் நாள் தேவகோட்டை வரும் திருப்பதி ஸ்ரீனிவாசபெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி தாயாருடன் தேவஸ்தான பட்டாச்சாரியர்கள்,அதிகாரிகள் வருகின்றனர். மணிமுத்தாறு எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது.
ஏற்பாடுகளை தலைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், துணை தலைவர் சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன், செயலாளர் ராமநாதன், ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், பொருளாளர் லட்சுமணன், மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா கல்லூரி பவநகர் ஸ்டேடியத்தில் 30ம் தேதி இரவு 9 மணி வரை திருக்கல்யாணம் நடக்கிறது.

source : Dinamalar