Nagaratharonline.com
 
பழனியப்ப செட்டியார் வள்ளியம்மை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை  Aug 13, 12
 
தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டை முருகானந்தா பள்ளியில் பழனியப்ப செட்டியார் வள்ளியம்மை அறக்கட்டளை சார்பில், இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் பழ.ரெங்கநாதன்செட்டியார் தலைமை வகித்தார்.
முத்துக்கருப்பன்செட்டியார், உமையாள் ஆச்சி ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் எழுதுபொருள்களை வழங்கினர்.
இதில் பள்ளிச் செயலர் முத்துவேல், பள்ளிக்குழுத் தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.
முன்னதாக தலைமையாசிரியை மீனாம்பிகை வரவேற்றார். மாலதி நன்றி கூறினார்.

Source:Dinamani