Nagaratharonline.com
 
அதிக அளவில் போலீஸ் வாகனங்கள் வருகை: தேவகோட்டையில் பரபரப்பு  Aug 13, 12
 
தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டை நகரில் அதிகளவில் போலீஸ் வாகனங்கள் சனிக்கிழமை வந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை நகருக்குள் சனிக்கிழமை பிற்பகல் அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் திடீரென வந்தன. இதனால் நகருக்குள் அசம்பாவிதம் ஏதும் எற்பட்டுவிட்டதோ என பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். அனைவரும் தங்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, வழக்கமாக மாவட்டத்தின் முதல் வாரம் நடத்தப்பட்டும் மாவட்ட அளவிலான குற்றப்பிரிவு அதிகாரிகள் கூட்டம் முதன்முறையாக தேவகோட்டையில் நடைபெறுகிறது என தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் தேவகோட்டை நகரில் நகைக்கடையில் ஒருகிலோ தங்கம் திருட்டு மற்றும் மில் அதிபர் வீட்டில் இருந்தவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை ஆகிய சம்பவங்களில் நடந்த விசாரணையிவ் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
மேலும் மாவட்ட எஸ்.பி சனிக்கிழமை தேவகோட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் காலையில் கலந்துகொண்டதால் இங்கே கூட்டத்தை நடத்திவிடலாம் என முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

Source:Dinamani