Nagaratharonline.com
 
I T I படித்தவர்களுக்கு சேலம் இரும்பு ஆலையில் பயிற்சியுடன் பணி  Aug 17, 12
 
Steel Authority of India Limited(SAIL) -ன் கீழ் செயல்படும் சேலம் இரும்பு ஆலையில் ஊக்கத்தொகையுடன் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Attendant-cum-Technician Trainee

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 2 வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது முதல் வருடத்தில் மாதம் ரூ.6,600, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.7,700 சம்பளமாக வழங்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள www.sail.shine.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.09.2012