Nagaratharonline.com
 
காசி கோயில் பூஜைக்கு ரூ. 16 லட்சம் நிதியுதவி  Aug 19, 12
 
 
காசி விஸ்வநாதர் கோயிலில் நடத்தப்படும் 3 கால பூஜைக்கு, மதுரை டால்ஃபின் பள்ளித் தாளாளர் ரூ. 16 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
காசி நகரில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில், ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மைக் கழகம் 3 கால பூஜையை நடத்தி வருகிறது.
இந்த பூஜைக்கு தேவைப்படும் தேன், தயிர், நல்லெண்ணெய் ஆகிய பொருள்களுக்காக நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. 16 லட்சத்துக்கான காசோலையை, டால்ஃபின் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் ஏஆர். ராமநாதன், வங்கியில் டெபாசிட் செய்தார்.
இதனை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
ரூ. 16 லட்சத்துக்கான டெபாசிட் ரசீதுகளை, நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மைக் கழகத்தின் உபதலைவர் பி.எல்.எம். முத்தையாவிடம் ஏஆர். ராமநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ராஜா முத்தையா மன்ற அறங்காவலர் சேக்கப்பச் செட்டியார், அண்ணாமலை, முத்து பழனியப்பன், வைரவன், டாக்டர் எம்ஆர். முத்தையா, அடைக்கப்ப செட்டியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.