|
சிவகங்கை To பாகனேரி : அடிக்கடி பழுதாகும் அரசு டவுன் பஸ் Aug 21, 12 |
|
சிவகங்கையில் இருந்து பத்தாம் நம்பர் அரசு டவுன் பஸ் வண்டி எண் டி.என். 63 என்.0855 நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம் வழியாக பாகனேரிக்கு காலை 5.45 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் வந்து செல்கின்றது. இந்த வண்டி பழைய நிலையிலே பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த வண்டி புறப்படும் ஊரில் இருந்து புறப்பட்டு சேரும் ஊருக்கு போய் சேருமா என்பது என்றும் சந்கேம்தான். அந்த அளவுக்கு இந்த வண்டி கன்டிஷன் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வண்டியில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் முடித்து வீடு திரும்பும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு ஆண்டவனை வேண்டி வேறு வழியின்றி பயணம் செய்து வருகின்றனர். காரணம் போகின்ற இடத்தில் நடு வழியில் திடீரென்று நின்றுவிடும்.
பின்னர் இதனை இயக்க பஸ்சை தள்ள ஆள் பிடிக்க வேண்டும். அப்படியே தள்ளினாலும் பஸ் மனது வைத்தால் ஓடும், அல்லது முரன்டு பிடித்தால் நடு வழியிலே அன்று முழுவதும் நின்று விடும். இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகளும், இந்த பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகளும், படும் அவதிக்கு அளவேயில்லை. இதைவிட ஓடிக்கொண்டிருக்கும் இந்த பஸ்சில், திடீரென விளக்கு எரியாமலும், சில சமயம் ஸ்டேரிங் வளைக்க முடியாமலும், இதெல்லாம் என்ன என்கின்ற அளவுக்கு பிரேக்கே பிடிகாமலும் சாதனை படைத்து பயணிகளை அச்சுறுத்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
புதிய பஸ் இயக்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
|
|
|
|
|